Thursday 15 December 2011

எ.கொ.சா.இ

சின்ன வயசுல , பிறந்தநாள் பரிசா அப்பா வாங்கிக் கொடுத்த வீடியோ கேம் ரொம்பப் பிடிச்சுப் போயி ,
ஆறு நாள் தொடர்ந்து விளையாடிட்டு அதுக்கப்புறம் அத தொடவே இல்ல !

கொஞ்சம் பெரியவனா ஆனதுமே............. ,
எல்லாருந்தான் சைக்கிள் ஓட்டுராய்ங்கன்னு ,
ஆசையா சைக்கிள் பழகி ஆறு மாசம் சைக்கிளே கதின்னு கெடந்ததுல, சைக்கிள் டயர் போலயே என் சைக்கிள் ஆசையும் தேய்ஞ்சு போச்சு!

படிக்கிற வயசுல, சரியாப் படிப்பு வரலைனாலும், ஒரே வகுப்புல , ஒரு வருஷம் முழுசா படிக்க முடியாம, டீச்சர் சரியா சொல்லித்தரலைன்னு அப்பாட்டச் சொல்லி வகுப்பு பிரிவையும் அடிக்கடி மாத்தீருவேன் !

பத்தாவது வரைக்கும் படிச்சதுக்கே பள்ளிக்கூடம் சலிச்சுப் போயி, கேட்டரிங் காலேஜ்ல போய் சேர்ந்துட்டேன் !
ரெண்டே செமஸ்டர்தான்.......  கேட்டரிங்குக்கு டாட்டா சொல்லீட்டேன் !

கம்ப்யூட்டர் , கர்னாடக சங்கீதம், ஸ்போக்கன் இங்கிலீஸ்னு  எல்லா கிளாஸுக்கும் போனேன்........................ ,
பாதியிலேயே போர் அடிச்சு விட்டுட்டேன் !

நிறையா பொண்ணுங்கள சைட் அடிச்சு..................,
ஒவ்வொரு பொண்ணா, நாலு பொண்ணுங்கள லவ்வும் பண்ணிப் பாத்தேன்..................,
ம்ம்ம்ஹூம் சரியா செட் ஆகல !

சரி வேலைக்குப் போலாம்னு முடிவு பண்ணி  ................,
மெடிக்கல் ஷாப். சூப்பர் மார்க்கெட், பனியன் கம்பெனின்னு எல்லாத்துக்கும் போனேன் .......................  ,
எதுவுமே என் திறமைக்கு தகுந்ததா தெரியல !

இனி சொந்த வியாபாரம்தான் சரின்னு முடிவு பண்ணி..................,
அப்பாகிட்ட ஒரு லட்சம ரூபாய  அடம் பிடிச்சு வாங்கீட்டுப் போயி ஒரு பேன்ஸி ஸ்டோர் ஆரம்பிச்சேன்............,
வருமானம் திருப்தியா இல்ல !

இப்ப வேற ஏதாவது பெரிய பிஸினஸ் ஆரம்பிச்சுப் பாக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கும் போது............




எனக்கு கல்யாண வயச்சாச்சுன்னு அம்மா சொல்ராங்க ........!


- ஜீவன் -

7 comments:

  1. எங்க அம்மா அப்பவே சொல்லுச்சு....
    இது எப்படி இருக்கு தெரியுமா?மச்சி நீ கேளேன்...

    ReplyDelete
  2. ஹாஹா, இதுவே பாராட்டு, நன்றி நண்பரே

    ReplyDelete
  3. அருமை ஜீவன். அந்த கடைசி வரி நகைச்சுவை கலந்த ஷாக் ஏற்படுத்தியது என்றால், அதற்க்கு முன் நீங்கள் அடுக்கடுக்காக படிப்படியாக சொல்லிவந்ததினால் ஏற்பட்டது. அருமை.வாழ்க வளர்க.

    ReplyDelete
  4. நன்றி சார்

    ReplyDelete
  5. நகைசுக்கான புனைவா இல்லை சுயசரிதமா?
    நல்லாயிருக்கு நண்பா..
    கல்யாண வயசுல இருக்குற எல்லாருக்குமே ஒரு வரியாவது பொருந்தி போகும்...:))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா, நகைச்சுவைக்காக எழுதியதுதான் நண்பரே, மற்ற பதிவுகளை படித்தால், அதை நீங்களே உணர்வீர்கள் !

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete