Tuesday 25 June 2013

பூ வாசம் புறப்படும் பெண்ணே...

மாநிறம்தானென்றாலும் வசீகரித்தாள், பழைய சேலைதானென்றாலும் பாந்தமாய் உடுத்தியிருந்தாள்,நேர் வகிடும், நெற்றிப்பொட்டுமாய் ஈர்த்தாள் , வயதும் இருப்பதைந்திற்கு மிகையாயிறாது, காலுக்கு செருப்பு கூட இல்லாமல் , மாலை மங்கும் வேளயிலே, தேசிய நெடுஞ்சாலையில் நின்றிந்தாள் , காற்றெங்கும் அவள் வைத்திருந்த மல்லிகை மணம்....
தனியாக காரில் பயனித்துக் கொண்டிருந்த நான்,தூரத்திலிருந்தே அவளை கவனித்துவிட்டேன், வண்டியின் வேகத்தை குறைத்து, அவளருகே சென்று நிறுத்தினேன்...
லேசாய் செருமி, கரகரத்த குரலை சரி செய்துகொண்டு அவளை பார்த்து கேட்டேன் .... ரேட் என்ன ?

முழம் 10 ரூபாயென்றாள்... வாங்கி டெஸ்போர்டில் அமர்ந்திருந்த பிள்ளையாருக்கு சூட்டிவிட்டு வண்டியை கிளப்பினேன்..

- ஜீவன் -

Wednesday 27 February 2013

இன்னலே...

என் பயணம் ,
                            வேகமான வாகங்களின் நெடுஞ்சாலை..
பலர் என்னை கடந்து செல்கின்றனர். அது போல் நீயும் கடந்திருப்பாயெனின், கலங்கித் தவித்திருக்கமாட்டேன் நான்.

                          நானா உன்னை என் இமை திறந்து ஆட்கொண்டேன் ?. எப்படி நுழைந்தாய் என்னுள் என் அனுமதியின்றி ?.

                          சூறாவளிகளை வெறும் கைக்குட்டையால் சமாளிக்கும் என்னை, வெறும் தென்றலில் நீ கலங்கடித்தாய் !

                           என்ன மாதிரியான வேதனை அது ... நீ தருவது ?, தவிக்கவும் முடியாமல்... தவிர்க்கவும் முடியாமல் !

                          உன்னோடு என்னால் இருக்க முடியாது. உன் பிரிவு எனக்குச் சம்மதம் மட்டுமல்ல, சந்தோசமும் கூட.

                          இனி எப்போதும் என் கண்ணில் பட்டுவிடாதே..............

                                                                                                                                     தூசியே ! 

- ஜீவன் -