Saturday 26 May 2012

யாதுமானவன்....

ஆடைகள் அரைகுறையாய் !

அவன் வார்த்தைகளுக்கோ அதுவுமில்லை !

பெரும் மூட்டைக்குள் கற்கள் பொறுக்கி வைத்திருக்கிறான், அருகில் செல்வோருக்கு ஆளுக்கொன்றாய் நீட்டுகிறான் !

அழுக்கேரி சடை பிடித்த தலைமுடியே கிரீடம் !

எதோ சாதித்த பெருமிதம் எப்போதும் அவன் முகத்தில் !




நிசப்தம் சாத்தியமில்லை என்றான் !

இரைச்சல் மிகுதியென்றான் !

கூடுகளாய் குப்பை சேர்ப்பதாய் பறவைகளைப் பழித்தான் !

அம்புலி வருமுன் ஓடி மறைந்துகொள் என்று சூரியன் காதில் கிசுகிசுத்தான் !

உரக்க கத்தி.....

புதைகுழிக்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே.........

வாழ்க்கை உங்களை விழுங்கிக் கொண்டிருப்பதை அறிவீரோ ? என்றான் !

எத்தனை முறை வென்றாலும் கடைசியில் தோற்றுப்போவாய் மரணத்திடம் என்றான் !

சன்னமான குரலில் .............

நிர்வானம் உடலுக்கில்லை என்றான் !

எவரும் திருப்தி அடையா தாரம் பொருளா"தாரம்" என்றான் !

அழுக்கு தாடிக்குள் விரல் சொருகி , வரட்..... வரட்டென சொரிந்தவன் .........

அலறியபடி மீண்டும் சொன்னான்..........

நிசப்தம் சாத்தியமில்லை , இரைச்சல் அதிகம்..........


- ஜீவன் -

5 comments:

  1. சூப்பர் மாம்ஸ்... நல்லாருக்கு

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் மச்சி

      Delete
  2. யாதுமானவன்.... குறையில்லாதவன்..! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ”கூடுகளாய் குப்பை சேர்ப்பதாய் பறவைகளைப் பழித்தான்!
    அம்புலி வருமுன் ஓடிமறைந்துகொள் என்று சூரியன் காதில் கிசுகிசுத்தான்!”
    அருமை! வளர்க!

    கமெண்ட்: இன்னும் கொஞ்சம் இண்டென்ஸிட்டியை ஏற்றணும்! :)

    ReplyDelete