மழை நாளில் கப்பல் செய்ய காகிதம் கிழித்தவன் . . .
மளிகை கடை அண்ணாச்சி பொட்டணத்தில் வாசிக்கத் தொடங்கி. . .
காமிக்ஸ், பூந்தளிர்களின் ரசிகனாகி . . .
பாடப் புத்தகங்களால் துவம்சம் செய்யப்பட்டு . . .
டீக்கடை தினத்தந்தியை பள்ளியில் பிதற்றி . . .
மொழி பழக வழி தேடி, டிக்ஸ்னரியோடு ஹிந்துவில் மூழ்கி . . .
வார இதழ்களின் சினிமா செய்திகளில் லயித்து . . .
பாட்டுப் புத்தகமும், பலான புத்தகமுமாய் சிதைந்து . . .
கவிதை புத்தகத்தில் கால் தவறி விழுந்து . . .
நிதானித்து எழுவதற்காய் கம்யூனிசம் கற்று . . .
புரட்சி கசக்க கம்யூனிசம் துறந்து. . .
தலைக்கேறிய போதை இலக்கியம் கேட்க . . .
புரியாவிடினும் புதினம் குழப்பி . . .
முழுதாய் வாசிக்கும் பொறுமை தொலைத்து. . .
கடைசிப்பக்கம் முதலில் பருகி . . .
நுனிப்புல்லாய் புத்தகம் மேய்கிறேன் . . . இப்போதெல்லாம் !
அறிவு முதிர்ச்சியோ ? அறிவீனமோ ? இதுவே நான்...!
வேண்டுவதிதுவே. . .
புத்தகங்களாலேயே கட்டுங்கள் என் கல்லறையை !
எனை அரிக்கப்போகும் கரையான்களுக்கும் பிடிக்கும் காகிதவாசம் !
- ஜீவன் -

ReplyDeleteஎனை அரிக்கப்போகும் கரையான்களுக்கும் பிடிக்கும் காகிதவாசம் !
அருமை..
Excellent ...!
ReplyDelete